சரியாக 5 வருடங்கள் கழித்து, பூஜாவின் மனதில் மீண்டும் மலர்ந்தது அந்த காதல் கொடி. இடைப்பட்ட காலத்தில் பூஜா யாரையும் பார்க்கவில்லை. கல்லூரி வாழக்கை முடிந்து பூஜா நிஜ வாழ்க்கையில் கால் அடி எடுத்து வைத்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. ஷா அலாமில் ஒரு தனியார் photography நிலையத்தில் பணி புரிந்து வந்தாள். கை நிறைய சம்பளம், வீட்டு சுமைகளை தன் முதுகில் ஏற்றிக் கொண்டாள். வீட்டு செலவுகளை தானும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பூஜாவிற்கு கல்லூரியில் இருந்தே தோன்றியது. இதைப் பற்றி தான் பூஜாவும் அவளின் தோழிகளும் எப்போதும் பேசிக் கொண்டு இருப்பார்கள். இறைவன் boologa திற்கு வருவதில்லை. அதனால் தான் எனக்கு இரு தோழிகளை அனுப்பி வைத்தான் போலும். இவர்கள் இருவரும் அருகில் இருக்கும் போது என் வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதை நினைத்து மனம் இப்பவும் ஏங்குகிறது.(2025)
27 July 2019
ஒரு நாள் பூஜாவின் childhood தோழி கை பேசியில் தொடர்புக் கொண்டாள். விரைவில், பழைய நண்பன் ஒருவனின் பிறந்தநாள் விழா நடக்கவிருக்க போவதாகவும் அதில் நான் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டும் எனவும் அவள் கேட்டுக் கொண்டாள். Childhood தோழி ஆயிற்றே மறுப்பு தெரிவிக்க முடியுமா? கொஞ்ச கஷ்டம் தான். பூஜா அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டாள்.
Birthday Party-க்கு செல்வதற்கும் முன்பாக, பழைய நண்பன் ஒருவனின் ig பக்கம் பூஜா கண்களில் பட்டது. நண்பன் என்று சொல்ல முடியாது; தெரிந்தத ஒரு நபர் என்று கூறலாம். என்றுமே அவனிடம் பேசாத பூஜா விற்கு அன்று மட்டும் என்னவாயிற்று என்று புரியவில்லை ஏதோ ஒரு குரல் உள்ளுக்குள் சொன்னது:
"அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பு."
அவளும் அனுப்பினாள்.
"Are you coming for the birthday party ?" அவன் பதில் சொன்னான், "Maybe. Will try." அந்த ஒரு "maybe" கூட பூஜாவுக்கு ஒரு வசந்தக் காற்றைப் போலவே இருந்தது. அந்த ஒரு சந்திப்பு பூஜாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்த காத்திருந்தது.
Party-க்கு தனது நெருங்கிய தோழியுடன் சென்றாள் பூஜா. அவளுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. Party க்கு சில simple அலங்கரிப்பு தேவைப்பட்டது. அதையெல்லாம் பூஜா party க்கு வருவதற்கு முன்பதாக வாங்கிவிட்டு வந்தாள். அவளது தோழியோ birthday நபருக்கு அழகான காட்சி தொகுப்பு ஒன்றைத் தயார் செய்தாள். இருவரும் பிஸியாக இருந்தார்கள். அந்த நேரத்தில், அவன் வந்தான். அவனைப் பார்த்தவுடன் பூஜாவுக்கு உள்ளுக்குள் ஒரு வித உணர்வு பூத்தது. அவள் உள்ளம் நனைந்தது.
ஏதோ சென்ற பிறவியின் ஒரு பந்தம் போல் தோண்றியது, அவளுக்கு.
அவள் அவனை வரவேற்று, நெருங்கிய நண்பன் ஒருவனை நீண்ட நாட்கள் கழித்து பார்த்து பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தாள். அவனும் அவ்வாறே நடந்துக் கொண்டான்.பணிப்பொறுப்பைப் பற்றி பேசினாள். சாதாரண உரையாடல் போல இருந்தாலும் அந்த few seconds – இல் அவனுடைய பேச்சு அவளின் பெண்மையை மென்மையாக தட்டி எழுப்பியது.
இந்தச் சந்திப்பு ஒரு உணர்வின் தொடக்கம். நட்பா? காதலா? பழைய பிறவியின் பந்தமா? பூஜா அறியவில்லை.
ஆனால் ஏதோ ஒன்று, may be அந்த பையனின் கணிசமான பார்வையோ? அல்லது அன்பான பேச்சோ ? அல்லது comfortable? எவை பூஜாவை மென்மையாக ஈர்த்தது என்று தெரியவில்லை. அவள் இதயத்தின் ஒரு மூலை அவனுக்காக திறந்தது. பூஜா மற்ற நண்பர்களுடன் சேர்ந்து சில பழைய புகைப்படங்களை வைத்து எளிய அலங்காரம் செய்தாள். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் அந்த பழைய பள்ளி புகைப்படங்களை பார்த்தபோது, நெஞ்சில் நிறைந்த நினைவுகளின் பாதையில் பயணம் செய்தது போல இருந்தது.
ஆசிரியர்கள் வந்தனர், birthday நபர் அனிச்சல் வெட்டினார். ஆசிரியர்கள் உரையாற்றினர். அதன் பிறகு, அனைவரும் சேர்ந்து காட்சி தொகுப்பைப் பார்த்தோம். அது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் நேரத்தைக் கடந்து, பழைய நாட்களுக்குத் திரும்பிப் போன உணர்வு.
நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவரும் தெரிந்தவர்கள் தான் என்பதால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தத்தம் வாழ்க்கையின் updates களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேச சொன்னார். பின் ஒவ்வொரு வகுப்பு பிரதிநிதியும் உரையாற்றினார். எங்கள் வகுப்பிலிருந்து என் தோழி பேசினாள். பணி பொறுப்பைப் பற்றிக் கேட்டனர். அவளும் ஒரு flow- இல் இன்றைய குழந்தைகள் ஆசிரியர்களை மதிப்பதிலும் மரியாதை காட்டுவதிலும் குறைவாக உள்ளனர் என்று பகிர்ந்தாள். எங்கள் காலத்தில் ஆசிரியர்களை பார்த்தால் பயமும் மரியாதையும் இருந்தது, இப்போது அப்படி ஒன்றும் இல்லை.
மேலும், “நீங்கள் பெற்றோராகும்போது, உங்கள் குழந்தைகளை கண்மூடித்தனமாக நம்பி, குற்றத்தை ஆசிரியர்கள்மீது சுமத்தாதீர்கள்” என்றும் சொன்னாள். அவள் அப்படி பேசுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை; எனவே அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
பிறகு நாங்கள் புகைப்படங்கள் எடுத்தோம். நான் கொண்டு வந்த போலராய்டு கேமராவால் புகைப்படங்கள் எடுத்து, அதை நினைவாக ஆசிரியர்களுக்கு கொடுத்தேன். அனைவரும் குழு புகைப்படம் எடுத்தோம். ஆசிரியர்கள் வீடு திரும்பினர். ஆனால் நாங்கள் அங்கேயே இருந்தோம்.
நான் மற்றும் என் தோழி வீடு திரும்ப வேண்டும் என்றிருந்தோம். ஆனால் எங்கள் நண்பர்களில் ஒருவர் “காலை வரை தங்கிவிட்டு போங்கள்” என்று வலியுறுத்தினார். அதனால் நாங்களும் தங்க முடிவு செய்தோம். எனக்கு அங்கே தங்க வேண்டிய ஒரு காரணம் இருந்தது…
அந்த பையன். சரி வாழ்க்கை எங்கு தான் அழைத்து போகிறது என்று பார்ப்போமே என நினைத்தாள். மற்ற நண்பர்களுடன்
பேசி கொண்டிருந்த பூஜா திடீரென கோபபட்டாள். அதை கவனித்த அந்த பையன் என்னவாயிற்று என்று வினவினான். தன் நெருங்கிய தோழியைப் பற்றி என்னிடமே இழிவாக பேசினாள் கூட்டத்தில் ஒருத்தி. எல்லோரும் சூழ்நிலை மற்றும் அனுபவத்திற்கு ஏற்றவாறு தான் செயல்படுவார்கள். சின்ன வயதில் அவள் நடந்து கொண்டதை வைத்து இப்பொழுதும் அப்படி தான் இருக்கிறாள் என்று ஊகிப்பது மிகவும் தவறு. பிறரை சந்திக்கும் போது எப்பொழுதும் kind heart ஆக இருப்பது நல்லது. அதை விட்டு விட்டு இவள் அப்படி அவன் இப்படி என்று புகார் கூறுவதை நிறுத்துங்கள் என்று கூறினேன். என் தோழி அங்கு இல்லை. நான் என் தோழிக்காக பேசியது அவனை உள்ளூர கவர்ந்தது போலும், என்னையே பார்த்து கொண்டிருந்தான்.
நான் அவனருகே தான் உட்கார்ந்து இருந்தேன் அல்லது அவனருகில் நிழலாய் நானிருந்தேன், இப்படி கூட சொல்லலாம்.
அவனோடு இடைவிடாமல் உரையாடியபோது, உலகமே மெதுவாய் மறைந்தது… நான் அவனின் சொற்களிலேயே அமைதியை கண்டேன்.
" விடிய விடிய பேசிக் கொண்டே இருக்கலாம், யாருக்கும் தெரியாமலே " என்ற பாடல் பூஜாவின் நினைவுக்கு வந்தது. திடீரென பூஜா தடுமாறினாள், அவன் குரலின் ஓசை கேட்டு அல்ல, நிஜமாகவே தடுமாறினாள். கழிவறைக்கு செல்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து அகன்றாள். நீர் துளிகளால் முகத்தை மலரவிட்டு கதவை திறந்து வெளியே வந்தாள். அங்கே அவன் அவளுக்காக காத்திருந்தான். கழிவறை வாசலில். அதைக் கண்டவுடன் பூஜாவின் மனத்தில் இனிய சலனம் ஏற்பட்டது. "எல்லாம் ok தானே" என்று கேட்டான். பூஜாவும் தலையை ஆட்டியவாறே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏன் என்னை பின் தொடர்ந்தாய் என்று கேட்ட போது "நீ சரியாக இல்லை, உன் கால் தரையில் படவில்லை! அதனால் தான் வந்தேன் " என்றான். அவனின் அக்கறைச் செயல், பூஜாவின் இதயத்தை பனித்துளி போல உருகச் செய்தது.
பிறகு, மற்ற நண்பர்கள் நடனம் ஆட அழைத்தனர். நடனம் என் நேசம்; 2000- தின் இசை ஓசையில், என் உடல் அலைபோல் அசைந்தது. அங்கு வந்த நண்பர்களுள் ஒருவன் என்னை அவனுடன் ஆட அழைத்தான். நானும் உடன் சென்றேன். "அவனுடைய" இரு விழிகளும் என்னை விட்டு நகரவில்லை. அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே எனும் வரிகளில் நான் மூழ்க அந்த நண்பன் என் கைகளைப் பிடித்து என்னை சில முறை சுழற்றினான். நானும் காற்றை தள்ளி கொண்டு சுற்றினேன்; என் ஆடையும் என்னுடன் சேர்ந்து சுற்றியது. அனைவரின் பார்வை என் மேல் இருந்ததைவிட அவன் பார்வை எங்கே இருந்ததது என்று தான் மனம் அலறியது.
ஒரு வழியாக, நடன கச்சேரியும் முடிந்தது. அனைவரும் உறங்க தயாராகினர். என் மனம் அவனிடம் மீண்டும் பேசத் துடித்தது.
ஆனால் அதற்கு காலம் துணை வரவில்லை. நான் அங்கே தங்குவதற்கு முன், பல முறை என்னிடம் கேட்டான் நான் அங்கு தங்குகிறேனா இல்லையா என்று. உறங்க செல்வதற்கு முன் அவனை சந்தித்து கேட்டேன் " நீ எப்போது இல்லம் திரும்புகிறாய்" என்று. தெரியவில்லை, ஆனால் நீ எழுந்து கொள்வதற்குள் நான் கிளம்பி விடுவேன் என்று பதில் அளித்தான். நானும் சரி வேறு ஒரு நாள் சந்திக்கலாம் என்று கூறி உறங்க சென்றேன். என் தோழியும் உடன் வந்தாள். மறுநாள் எனக்காக ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
நான் காலையில் எழுந்ததும் அவனை தேட சொல்லி என் கால்கள் அடம் பிடித்தன. என் கண்கள் அலை பாய்ந்தன. அவன் அங்கு இல்லை. முகத்தை அலம்பி விட்டு, பற்களை துலக்கி விட்டு விரைவாக சென்று என் கை தொலைபேசியை எடுத்தேன். அதில் அவனிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்திருந்தது. அதை கண்டவுடன் பூஜாவின் மனம் குளிர்ந்தது. சட்டென்று திறந்து படித்தாள். " Hey, I came to see you..but you were sleeping, I didnt want to disturb you. Will catch you someother time. Take care" என்று இருந்தது. அதை படித்ததும் பூஜாவிற்கு அளவில்லா மகிழ்ச்சி. இது போன்ற உணர்வுகளை முதல் முறை உணர்கிறாள். ஏற்கனவே, தோன்றியது ஒரு தலை காதல் அல்லவா! தான் உறங்கி கொண்டிருக்கும் போது ஒருவன் தன்னை பார்த்திருக்கிறான் தூக்கத்தை கலையாமல் சென்றுள்ளான். Sweet இல்லையா!
பிறகு பூஜா தனது பையைத் pack செய்யும் போது, அதன் உள்ளே ஒரு சூரியக் கண்ணாடி (shade) இருந்தது. முதலில் அது தனதுதான் என நினைத்தாள். ஆனால் அருகே பார்த்தபோது அது வேறொருவருடையது போலத் தோன்றியது. கார் எடுக்கும்போது திடீரென நினைவுக்கு வந்தது. அந்த shade தன் நண்பன் அணிந்திருந்தான் என்று.
உடனே அவருடைய நெருக்கமான இன்னொரு நண்பரிடம் அதை ஒப்படைக்கலாம் என்று நினைத்தாள். ஆனால் முன்பே அந்த shade அவருடையதா என்று உறுதிப்படுத்த வேண்டுமே! எனவே அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
"உன் shade தவறுதலாக என் பையில் வந்துவிட்டது. நான் அதை உன் நண்பரிடம் கொடுத்துவிடுகிறேன்."
அதற்கு அவன் உடனே பதில் அளித்தான்
"இல்லை, இல்லை, அப்படி செய்யாதே. நான் வந்து உன்னிடமிருந்து எடுத்துக்கொள்கிறேன்."
அவர் அனுப்பிய செய்தியை நான் வாசித்தபோது, நான் ஆச்சரியப்பட்டேன். அப்போது எனக்குத் தெரிந்தது அவன் தன்னுடைய shade- ஐ எனக்காகவே விட்டுச் சென்றான் என்று. அது தவறி செய்தது இல்லை.
அந்தச் சிறிய செயல் எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.யாரோ என்னைக் கவனித்தது போல…யாரோ என்னைக் காண முயற்சி செய்தது போல…அந்த உணர்வு என்னை சில நிமிடங்கள் அமைதியாக்கியது. இவையெல்லாம் பூஜாவிற்கு புதிதாக இருந்தாலும் உள்ளூர அகம் மகிழ்ந்தாள்.
அந்தச் சந்திப்பிற்குப் பிறகு இருவரும் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் பேசத் தொடங்கினர். தினமும் எதையாவது பகிர்ந்துகொண்டனர். சாதாரண விஷயங்களிலிருந்தே உரையாடல் ஆரம்பித்தாலும், அவனிடம் பேசுவது எப்போதும் சுவாரசியமாக இருந்தது. தனக்கு தெரியவில்லை என்றாலும் கனிவாக பேசி அவளுக்கு எடுத்துச் சொன்னான். ஒரு போதும் "நீ ஆசிரியர் தானே, உனக்கு இது கூட தெரியாதா " என்று கேட்டதே இல்லை. அது அவளுக்கு மேலும் comfortable ஆக பேசத் துணைப்புரிந்தது. அவன் பேச்சு எப்போதும் மரியாதை கலந்ததாகவே இருக்கும்.
அவன் எனக்குப் Northern Lights (வட திசை ஒளிகள்) பற்றி சொல்லித் தந்தான். வானம் நிறங்களால் மினுங்கும் அந்த அதிசயத்தைப் பற்றியும், அதை நேரில் பார்க்க வேண்டும் என்ற அவன் ஆசையையும் பகிர்ந்தான். அவன் தனது பணியைப் பற்றியும் பேசினான். அவன் ஒரு engineer, தனது வேலையை உயிராக நேசிப்பவன்.
வெளிநாட்டில் இருக்கும்போது, பணக்காரர்களுக்கான தனியார் விமான நிலையத்தில் பொறியியலாரர் ஆக இருந்தான். “எனக்கு என் வேலை மீது உள்ள அன்பு எப்போதும் மாறாது,” என்று சொன்னான். மலேசியாவுக்கு திரும்பியபின், மீண்டும் தனது engineer training தொடர்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தான். "Mr.Sky" தன்னம்பிக்கை நிறைந்தவன்.
அவன் எனக்குப் பல விஷயங்களைச் சொல்லித் தந்தான் , lucid dream என்றால் என்ன, தமிழ் பாடல் வரிகள், மற்றும் வாழ்க்கை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்.
ஒருநாள் நான் என் அம்மாவுடன் சண்டை போட்டேன். அந்தக் கோபத்தையும் கசப்பையும் அவனிடம் பகிர்ந்தேன். அப்போது அவன் மிகவும் அமைதியாகக் கேட்டு, மெதுவாகச் சொன்னான் அம்மாவை நம்பிக்கையுடன் நடத்தணும். அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டான் . நான் அவருக்கு special ஆக எதுவம் பிடிக்காது என கூறினேன்.
அவன் ஒரு யோசனைச் சொன்னான்.
“அவளுக்காக ஒரு facial அல்லது medicure/pedicure புக் பண்ணு. சொல்லாமல் அவளை அழைத்துக் கொண்டு போ.”
நான் சிரித்தேன். “அது அவளுக்கு பிடிக்காது,” என்றேன்.
அவன் சிரித்தபடி சொன்னான்...
“பூமியில் எந்த பெண்ணுக்கும் அப்படி ஒரு பராமரிப்பு பிடிக்காதது கிடையாது. எல்லா பெண்களும் ஒருமுறை ஆனாலும் தங்களை பராமரிக்க விரும்புகிறார்கள்.”
அவனது வார்த்தைகள் எளிமையாக இருந்தாலும், என் மனதில் ஆழமாக பதிந்தன. அவன் சொன்னபடி நான் செய்தேன். அம்மா மிகவும் மகிழ்ந்தார். அந்தச் சிறிய செயல் எங்களை மீண்டும் இணைத்தது.
அந்த நாளிலிருந்து, நான் அவனை இன்னும் வேறுவிதமாகப் பார்த்தேன். அவன் ஒரு நண்பனாக மட்டுமல்ல, வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் காணச் செய்த ஒருவராகவும்.





.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)