பின்பற்றுபவர்கள்

சனி, 25 மே, 2024

2012

 




முதல் காதல் முதல் முத்தம் இரண்டும் மறக்குமா ! 2012- இல் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டது பூஜாவிற்கு. அந்த உறவிற்கு பெயர் ஏதும் சூட்ட முடியாது. பூஜாவின் நேசம் obsession ஆக மாற தொடங்கியது. அவனுக்காக கல்லூரியில் பல உதவிகள் செய்வதில் அகமகிழ்ந்தாள்; பண செலவுகள் உட்பட. அவ்வப்போது அவனும் அவளை மகிழ்வித்து வந்தான். அவள் அவன்  மீது கொண்ட நேசம் அ‌ந்த கடலை விட பெரியது இருப்பினும் அவள் அதை வெளிப்படுத்திய முறைகள் ஏதும் அவனுக்கு பிடிக்கவில்லை. 

நாளடைவில் பூஜாவின் நேசம் அவனுக்கு ஒரு பெரிய தொல்லையாக தென்பட்டது. பிரிவு தான் ஒரே வழி எ‌ன்று நினைத்தான். கல்லூரியில் வேரொருவர் உடன் பழகிக் கொண்டிருப்பதைப் பார்த்த பூஜாவிற்கு யாரோ பின் முதுகில் கூர்மையான கத்தியைக் கொண்டு குத்தியது போல் இருந்தது. பிறந்த குழந்தை தன் தாய் வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன் 
வீல் வீல் எ‌ன்று கத்துமாம்; அதை போல் தானும் கத்தி அழ வேண்டும் என்று நினைத்தாள். உடன் இருக்கும் படி கெஞ்சினாள்; கதறினாள். அவன் மனம் இறங்கவில்லை, இறுதிவரை. "நான் எடுத்த முடிவு உன்னை காயப்படுத்தினாலும் உன் நன்மைக்கே நான் இதை செய்தேன்". 
நெருக்கமாக இருந்த ஒருவர் தன்னை வேண்டாம் என்று உதறி செல்லும் தருணத்தை முதல் முறையாக உணர்கிறாள்; துடித்தாள். 




பூஜா முன்பு போல் நம்முடன் பழகுவது இல்லை என்று கவனித்த அவளின் நண்பர்கள், உண்மையைக் கண்டறிய நினைத்தார்கள். அதற்கு காலமும் கை கூடியது. ஒரு நாள்... பூஜாவை காணவில்லை என்று நண்பர்கள் அனைவரும் தேடிக் கொண்டிருந்த வேளையில், பூஜா தனியே ஒரு வகுப்பறையில்  தனக்கு நிகழ்ந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள். சில மணி நேரம் கழித்து, அனைவரும் அங்கு வந்தனர். அவனும் வந்தான். பூஜாவின் மேல் என்னென்ன புகார் சொல்ல முடியுமோ அனைத்தையும் சொன்னான். அனைத்தையும் கூறிய அவனுக்கு , அவன் என்ன செய்தான் என்று கூற வாய் வரவில்லை போலும். நாம் பழகிய ஆளா இவன் என்று கரு விழி நகராமல் அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள், பூஜா. புண் பட்ட மனதுக்கு என்ன தோன்றியது என தெரியவில்லை, பளார் என்று அவன் கன்னத்தில் ஒன்று விட்டாள்.
அறை முழுதும் நிசப்தம். பூஜா உடனே அங்கிருந்து வெளியேறினாள். 
அவள் கண்களில் வடியும் கண்ணீர் துளிகளின் வலி அவளுக்கு மட்டுமே புரியும் என்று ஆழ்மனம் நினைக்கும் போது அவள் நண்பர்கள் கண் எதிரே வந்து நின்றனர்.




 அதில் ஒருவள் சொன்னாள் " இந்த மாதிரி ஒருவன் உன் வாழ்க்கைக்கு தேவையா? உன்னை பற்றி குறைகள் மட்டுமே சொல்ல தெரிந்த இவனுக்கு உன்னுடைய நிறைகள் நினைவில் இல்லை. மறந்து விடு; நாங்கள் இருக்கிறோம் " 10 வருடங்கள் மேல் ஆகின்றன, இ‌ன்று‌ம் அவள் கூறியது நினைவில் இருக்கிறது. காதல் ஒரு பட்டாம்பூச்சி போன்றது. அது அழகாக இருக்கிறது என நினைத்து அதை கையுள் அடக்கி கொள்ள பார்த்தால் அது இறந்து விடும்.  அதை தன் போக்கில் விட்டு அழகு பார்த்தால் அது நம்முடனே இருக்கும். என்ன, சரி தானே?
தொடர்ந்து என்னவெல்லாம் நடந்தது, பூஜா இதை எப்படி எதிர்க்கொண்டாள் என்பதை அடுத்த chapter- இல் படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

2019 சுகமான சுமைகள்

 சரியாக 5 வருடங்கள் கழித்து, பூஜாவின் மனதில் மீண்டும் மலர்ந்தது அந்த காதல் கொடி. இடைப்பட்ட காலத்தில் பூஜா யாரையும் பார்க்கவில்லை. கல்லூரி வா...