முதல் காதலின் நினைவுகள் பூஜாவின் நிகழ்காலத்தை கெடுக்க அவளின் மனம் இடம் கொடுக்கவில்லை. கல்லூரியில் அவள் கண் முன் அவன் நடந்து வருகையில், எதிரே யாரும் இல்லாதது போல் நடந்துக் கொண்டாள். தன்னுடன் பழகியவள் இப்போது தன்னை கண்டு கொள்ளாமல் செல்வது அவனுக்கு வருத்தமாக இருந்தது, தன்னுடைய மன பலத்தைக் கண்டு பூஜா பெருமிதம் கொண்டாள். இருப்பினும் இந்த காதல் நினைவுகளின் சுவடு என்றும் அழியா.
சில மாதங்களுக்குப் பிறகு, பூஜாவின் மனம் எனும் பூங்காவில் மீண்டும் ஒரு வசந்த காலம். பூஜா மிகவும் இயல்பாக நடனம் ஆட கூடியவள். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது, தன் senior களுடன் சேர்ந்து வெளி நிகழ்ச்சிகளில் கலந்து ஆடி மகிழ்ந்து வந்தாள். ஒரு நாள், பூஜா தன்னிலை மறந்து நடன பயிற்சியில் மூழ்கி இருந்த வேளையில்...
அங்கு வந்த ஒரு senior - இன் நண்பன் மீது இவள் கண் பார்வை விழுந்தது. அடர்த்தியான தலை முடி, வசீகரிக்கும் பார்வை, உதட்டோர புன் சிரிப்பு, சாக்லேட் நிற மேனி- Mr.Romeo. பூஜா நடன பயிற்சி செய்வதை விடுத்து, அவன் தன் தோழிகளுடன் உரையாடுவதைக் கவனித்தாள். அவனைப் பார்த்த அக்கணமே அவளுக்கு காட்சி பிழை போல் தோன்றியது. அதை அவள் கண்கள் அவனுக்கு காட்டியிருக்கும் போலும். அவனும் அதை இரசித்த வாரே அருகில் வந்து கை குலுக்கி தன்னை அறிமுக படுத்திக் கொண்டான். அவனுக்கும் நடனத்தில் ஆர்வம் மிகுதி என்பதை வெளிப்படுத்தினான். சிறிது நேரம் பேசிய பிறகு இருவரும் கை தொலைபேசி எண்களை மாற்றி கொண்டனர். பூஜா கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சியில் Mr.Romeo தான் தனது partner என்பதை அறிந்த பூஜா மனம் நெகிழ்ந்தாள். அந்த கலை நிகழ்ச்சிக்கு இரண்டு வாரம் இடைவெளி இருந்ததால் பூஜாவும் Mr.Romeo வும் அடிக்கடி சந்தித்துக் கதைத்து வந்தனர். இருவருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருந்தன. உதாரணத்திற்கு, கலை! நடன கலை தவிர்த்து ஓவிய கலை. Mr. Romeo வின் பேச்சை நாள் முழுவதும் கேட்கலாம் போன்று தோன்றியது பூஜாவிற்கு. Flirt பண்ணும் வகையில் அல்ல அவரின் பேச்சு ஆனால் எப்போதும் ஒரு வித அக்கறையோடு பேசுவது போல் இருந்தது.
Stranger ஒருவர் தன் மீது அக்கறை காட்டுவது பிடித்திருந்தது பூஜாவிற்கு. இந்த அக்கறை தன்னிடம் எதையோ எதிர்பார்த்து வந்தது போல் இல்லை அவளுக்கு. உள்ளம் கொள்ளை போனதோ உன்னை கண்ட நாள் முதல்...மனதில் பூத்த காதல் எனும் செடிக்கு ஒவ்வொரு நாளும் நீர் ஊற்றி வந்தாள். இவ்விருவரின் உறவை கல்லூரியில் அனைவரும் கவனித்தனர். இதை எதையுமே பொருட்படுத்தாமல் பூஜா அவனுடன் இயல்பாக பழகி வந்தாள். Mr.Romeo வுடன் பேசும்போதெல்லாம் அவர் மிகவும் ambitious ஆனவர் என்பதை தெரிந்துக்கொள்வாள். எப்போதும் தன் profession- இல் சாதிக்க வேண்டும் என்றே பேசிக் கொண்டிருந்தார். Mr Romeo எதையெல்லாம் இரசிகின்றாறோ அதையெல்லாம் தானும் இரசித்து வந்தாள்.
அப்படியே சில மாதங்கள் உருண்டு ஓடின. பூஜா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் காதல் உணர்வுகளை மறைமுகமாக Mr Romeo வுக்கு வெளிப்படுத்தினாள். தன் வாழ்க்கை துணையைப் பற்றி பெற்றோர்களிடம் சொல்ல தன்னை தயார் படுத்திக் கொண்டாள். அதே வேளையில் Mr.Romeo தன் காதலுக்கு பச்சை கொடி தான் காட்டுவார் என்று மனதார நினைத்தாள். காதல் மோகத்தில் மயங்கி இருந்த பூஜாவிற்கு தெரியவில்லை இன்னும் சில நாட்களில் தன் மனம் சுக்கு நூறாக உடைய போகிறது என்று.
ஒரு மாத விடுமுறையும் வந்தது. அனைவரும் தத்தம் hometown க்கு திரும்பினர். பூஜா இந்த விடுமுறை முடிந்ததும் தன் மனதில் பூத்த காதலை Mr. Romeo விடம் சொல்லி விடலாம் என்று நினைத்தாள். விதி மாறாக வேறு ஒன்று நினைத்தது.
ஒரு நாள் பூஜா காய்ச்சலில் இருக்கும் போது அவள் கை தொலைபேசி அலறியது. கை தொலைபேசி screen இல் அவள் கண்ணாளன் பெயரைக் கண்டவுடன் பூஜாவின் உடல் வெப்ப நிலை மேலும் கூடியது இன்ப அதிர்ச்சியால். உடல் நலம் சரியில்லை என்றதும் Mr.Romeo அவளை 100plus வாங்கி குடிக்கச் சொன்னார். இது போன்ற அக்கறை வார்த்தைகள் தான் பூஜாவின் மனதை கவர்ந்தது. பூஜா அவன் குரலைக் கேட்டவாறே கனவுலகத்தில் மிதந்தாள். சிறிது நேரம் கழித்து, Mr.Romeo மீண்டும் பேசத் தொடங்கினார். நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போமா அது தான் எனக்கு சரி என்று படுகிறது என்று கூறினான்.
" காதல் எனும் சொல்லை நானும் சொல்ல வில்லை; சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை " பூஜாவிற்கு இந்த பாடல் வரிகள் தான் நினைவில் பிறந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள். எதையும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், அடையாளம் இல்லா ஒன்றை கண்டால் இதயத்தின் ஓரம். மனதை கல்லாக்கிக் கொண்டு சரி என்று சொன்னாள். தொலைபேசி அழைப்பைத் துண்டித்து விட்டு தன் தலையணை தேடி ஓடினாள் பூஜா.
சில மணி நேரம் கழித்து தன் தாயாரின் குரல் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். எது எப்படி இருந்தாலும் தன்னை ஏற்க மறுத்த உண்மையான காரணத்தைக் கூறியதால் அவனுடைய நேர்மையை மதித்தாள் ; இரசித்தாள்.
மீண்டும் கல்லூரிக்குச் சென்ற போது அவனைக் கண்டாள். ஆனால் முன்பு போல் அவளால் அவனிடம் இயல்பாக பேச முடியவில்லை. பழைய நினைவுகள் அவளை வெகுவாக வாட்டியது. என்ன தான் இருந்தாலும் இவள் Scorpio ஆயிற்றே! ஒரு முறை முடிவு எடுத்தால் அதை மீற மாட்டாள். முடிவு எடுத்து விட்டாள்! வேண்டாம் என்று!
பூஜா சில வாரங்களுக்கு பிறகு Mr. Romeo வை கல்லூரியில் ஒரு பெண்ணுடன் பார்த்தாள். அவர்கள் பழகும் விதத்தை வைத்து இருவருக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்துக் கொண்டாள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது தான் பூஜாவிற்கு strong ஆனா காரணமாக இருந்தது அவனை மறக்க.
நீங்கள் எப்படி உணர்வீர் ஒரு வேளை நீங்கள் காதலித்த ஒருவர் வேரொருவர் உடன் உங்கள் கண் முன்னே நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தால் ? அப்படி தான் இருந்தது பூஜாவிற்கும்.
அப்படியே மூன்று ஆண்டுகள் கழிந்தன. இந்த காதல் நினைவுகளை மறக்க கை கொடுத்தது பூஜாவின் நண்பர்களே. ஒரு நாள் பூஜா கல்லூரியின் ஒரு அறையில் தனியே இருந்த போது பக்கத்து அறையில் யாரோ பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டது. அவர்களின் உரையாடல் பூஜாவின் காதில் விழுந்தது. மறு நொடி இதயம் கிழியும் ஒலி கேட்டது. "அவளுடைய தோற்றம், குரல் அனைத்தும் அவன் எதிர்பார்த்த மாதிரி அல்ல அதனால் தான் அவன் அவளை ஏற்க மறுத்தான்." பூஜாவிற்கு 100 சதவீதம் தெரிந்தது இவர்கள் யாரைப் பற்றி gossip பேசினார்கள் என்று. முன்பு அவன் அவளை ஏற்க மறுத்த காரணம் கூறியது அவளுக்கு நினைவுக்கு வந்தது." என்னால் உன் காதலை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் நான் உனக்கு loyal ஆக இருப்பேனா என்பதை உறுதியாக சொல்ல முடியாது"
உண்மையானக் காரணத்தைத் தெரிந்து கொண்ட பூஜா அவனுக்கு அவசரமாக ஒரு குறுந்தகவல் அனுப்பினாள். அவனும் அதைப் படித்து விட்டு அவளைச் சந்திக்க வந்தான்.
"நீங்கள் இவ்வாறு நடந்துக் கொள்வீர் என நான் நினைக்கவில்லை",என்றாள். எதுவும் புரியாமல் சற்று நேரம் திகைத்து நின்றான். "வெளித்தோற்றத்தைப் பார்த்து வருவதல்ல காதல். அது ஒரு விதமான உணர்வு. அதைச் சொல்லால் வரையறுக்க இயலாது. அவனுடைய கண்களைப் பார்த்தால் போதும், அவனுடையக் குரளைக் கேட்டால் போதும், அவன் தோளிள் சாய்ந்தால் போதும், அவன் கைகளைக் கோர்த்தால் போதும், அவன் நினைப்பை சுவாசித்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என தோன்ற வைக்கும் ஓர் உணர்வு. அவ்வாறு தான் நான் உணர்ந்தேன் உன்னுடன் பழகும் போது. ஆனால் உனக்கோ நிரந்தர மற்ற ஒன்றின் மீது தான் மோகம் அதிகம். பராவா இல்லை, இப்பொழுதாவது உன்னைப் பற்றித் தெரிந்துக் கொண்டேனே" என்றாள். உன் மனதைப் புன் படுதியதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்றான் அவன். "அழகு என்பது முகத்தைக் குறிப்பது அல்ல ஒருவர் மனதைக் குறிப்பதாகும். இன்று நீ என் கண்களுக்கு அழகாக தெரியவில்லை " என கூறி தன் விழிகளில் இருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பூஜா.
தான் அவளை இதற்கு முன் treat செய்த விதத்தைக் கண்டு வெட்கப்பட்டான். அவள் நடந்து செல்வதைப் பார்த்த வாரே தன் தவறை எண்ணி மனம் வருந்தினான். இருந்தும் இது பூஜாவிற்கு இனிய வலிகளே.
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)